வரலட்சுமி நோன்பு... அன்னையின் அருள் பெற செய்ய வேண்டியவை
லட்சுமிக்கு விருப்பமான மலர் செவ்வந்தி என்னும் சாமந்திப்பூ. இந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாம்.
நெல்லிக்கனியை தானம் செய்த பெண்ணின் வறுமை நீங்குவதற்காக மகாலட்சுமியை வேண்டி ஆதிசங்கரர் 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடினார். மகாலட்சுமியின் அருளால் அப்பெண்ணுக்கு பொன்னும் பொருளும் கிடைத்தது. இந்த ஸ்தோத்திரத்தை படித்தால் வீட்டில் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, வரலட்சுமி விரத பூஜையின்போது கனகதாரா ஸ்தோத்திரம் பாடி மகாலட்சுமியை வணங்குவது சிறப்பு. பாடலை பாட முடியாதவர்கள் பாடலை இசை வடிவில் ஒலிபரப்பி பூஜை செய்யலாம்.
* வரலட்சுமி விரத நாளில் இல்லம் தேடி வரும் மகாலட்சுமியை வரவேற்று மனம் குளிரும் வகையில் பூஜை செய்யவேண்டும்.
* வரலட்சுமி நோன்பு இருப்பவர்கள் கலசம் வைத்து அதில் வரலட்சுமியை ஆவாகனம் செய்து, அன்னைக்கு பிடித்தமான நைவேத்யங்களை படைத்து பூஜை செய்வது சிறப்பு.
* வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்து, பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும்.
* லட்சுமிக்கு விருப்பமான மலர் செவ்வந்தி என்னும் சாமந்திப்பூ. இந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாம்.
* மகாலட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.
* மகாலட்சுமி தாமரை மலரில் வசிக்கிறாள். எனவே தாயாருக்கு தாமரை மலர் சாற்றி வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் அளிப்பாள்.
* வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம்.
* மகாலட்சுமியின் அம்சமான துளசிக்கு மாடம் வைத்து அதை சுற்றி வர சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional