இந்த வார விசேஷங்கள் (2-5-2023 முதல் 8-5-2023 வரை)


இந்த வார விசேஷங்கள் (2-5-2023 முதல் 8-5-2023 வரை)
x

மே மாதம் 2-ம் தேதியில் இருந்து மே மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

2-ந் தேதி (செவ்வாய்)

* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.

* திருச்சி தாயுமானவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.

* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், சிவலிங்க பூஜை செய்யும் நிகழ்வு.

* மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (புதன்)

* பிரதோஷம்.

* திருஉத்திரகோசமங்கை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ரத உற்சவம்.

* மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (வியாழன்)

* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

* முகூர்த்த நாள்.

* சென்னை கேசவப் பெருமாள் கோவில் உற்சவம்.

* மதுரை கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர் சேவை.

* சமநோக்கு நாள்.

5-ந் தேதி (வெள்ளி)

* சித்ரா பவுர்ணமி.

* மதுரை கள்ளழகர் மாலை மாற்றி வைகையாற்றில் எழுந்தருளல்.

* திருச்சி தாயுமானவர் விடையாற்று உற்சவம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

* சமநோக்கு நாள்.

6-ந் தேதி (சனி)

* மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் பவனி.

* சென்னை கேசவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு சந்திரப் பிரபையிலும் வீதி உலா.

* கள்ளக்குறிச்சி கலியபெருமாள் வெள்ளிக் குதிரையில் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

7-ந் தேதி (ஞாயிறு)

* மதுரை கள்ளழகர் காலை மோகனாவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்.

* சென்னை கேசவப் பெருமாள் காலை சூரிய பிரபையிலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

8-ந் தேதி (திங்கள்)

* சங்கடஹர சதுர்த்தி.

* மதுரை கள்ளழகர் அதிகாலை திருமலைக்கு எழுந்தருளல்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம்.

* கள்ளக்குறிச்சி கலியபெருமாள் ஏகாந்த சேவை.

* சென்னை கேசவப் பெருமாள் இரவு தங்க பல்லக்கில் பவனி.

* சமநோக்கு நாள்.


Next Story