வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திர நூலானது, சைவ நெறிகளுக்கு நிகராக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூல், 3 ஆயிரம் பாடல்களால் ஆனது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

உணர்வுடையார்கட்கு உலகமும் தோன்றும்

உணர்வுடையார்கட்கு உறுதுயர் இல்லை

உணர்வுடையார்கள் உணர்ந்த அக்காலம்

உணர்வுடையார்கள் உணர்ந்து கண்டாரே.

விளக்கம்:- இறை உணர்வு பெற்றவர்களுக்கு இந்த உலகத்தின் உண்மையான காட்சி தோன்றும். அது மாயையில் இருந்து நீங்கிய காட்சியாகும். அப்படிப்பட்டவர்

களுக்கு துயர் எதுவும் வராது. இறை உணர்வு பெற்ற அந்த நொடியிலேயே, இறைவன், உயிர், தளை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய உணர்வு அவர்களுக்கு கைவரப் பெறும்.


Next Story