வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளைப் பின்பற்றுபவர்களுக்கு, ஓர் ஊன்றுகோலாக இருக்கிறது. அந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..
பாடல்:-
தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருஅம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற தென்பொதுவாமே.
விளக்கம்:- இந்த பிரபஞ்சத்தின் தலையாய தெய்வமான சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தை 'சிற்றம்பலம்' என்றும், 'சிதம்பரம்' என்றும், 'அம்பலம்' என்றும் பலரும் பலவாறாக கூறுவார்கள். ஆனால் அப்படி சிவபெருமான் வீற்றிருக்கின்ற அந்த தென்பகுதியானது, இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான இடமாகும்.
Related Tags :
Next Story