வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சைவ நெறிகளுக்கு நிகராக வைத்து போற்றப்படும் நூலாக, திருமூலர் இயற்றிய திருமந்திரம் திகழ்கிறது. மூவாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்

ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்

நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்

தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

விளக்கம்:-

பக்தியின் வாயிலாக இறைவனைப் பாடிப் புகழ்ந்து அவனடி சேரும் முறையை நான் அறியவில்லை. உடலை வில்லாக வளைத்து, தவம் இருந்து உடல் வருத்தி இறைவனை அடையும் வழியையும் நான் அறியவில்லை. பல வழிகளிலும் இறைவனை நாடிச் செல்லும் முறையையும் நான் அறியவில்லை. ஆனால் தன்னுள் இறைவனைத் தேடும் ஞான வழியைக் கொண்டு நான் இறைவனை அறிகின்றேன்.


Next Story