சிவாலய வழிபாட்டில் செய்ய வேண்டியவை


சிவாலய வழிபாட்டில் செய்ய வேண்டியவை
x

இறைவனின் உறைவிடம் தான் கோயில். அந்த கோயில்களுக்கு சில நியதிகளை பின்பற்றி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.

* நீராடி தூய உடை அணிந்து சமயச் சின்னங்கள் (திருநீறு, ருத்திராட்சம்) அணிந்து செல்ல வேண்டும்.

* வாசனை மலர்கள், தேங்காய், பழம், சாம்பிராணி, ஊதுபத்தி, தீப எண்ணெய், நெய் இவைகளில் எவையேனும் கொண்டு வருதல் வேண்டும்.

* கோவிலின் உள்ளே செல்லும் முன்பு கைகால்களை சுத்தம் செய்து, பின் தலைமேல் இருகரங்கள் கூப்பி கோபுரத்தை வணங்கி செல்ல வேண்டும்.

* ஐந்தெழுத்தை மனதில் சொல்ல வேண்டும்.

* முதலில் கோபுரத்தின் பக்கமாக பூமியில் விழுந்து வணங்க வேண்டும்.

* தல விநாயகரை தரிசித்து தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

* கொடிமரம், பலி பீடம், நந்தி இவைகளை வணங்கிய பின்னர் துவாரபாலகர்கள் உத்தரவு பெற்று இறைவன் சன்னிதியை அடைதல் வேண்டும்.

* பிரகாரத்தில் உள்ள துர்க்கை, சண்டேஸ்வரர், நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், நவக்கிரகம் ஆகிய மூர்த்திகளை வழிபட வேண்டும்.

* இறைவன், இறைவி இவர்களின் சன்னிதியை மும்முறை வலம் வரவேண்டும்.

* ஒவ்வொரு சன்னிதியிலும் அந்தந்த தெய்வங்களுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும்.

* மற்றவரின் அமைதிக்கு இடையூறு இல்லாமல் பாட வேண்டும்.

* மற்ற நேரங்களில் ஐந்தெழுத்தைச் சொல்லி மனதில் தியானம் செய்ய வேண்டும்.

* பின்னர் கொடிமரத்திற்கு அருகில் வந்து இடமிருந்து வலமாக பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விடைபெற வேண்டும்.

* வணங்கிய பின் சற்று தூரத்தில் அமர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டுத் திருக்கோவிலிருந்து விடைபெற வேண்டும்.


Next Story