முருகப்பெருமானின் சிறப்பு


முருகப்பெருமானின் சிறப்பு
x

முருகப்பெருமானுக்குரிய ‘சரவணபவ’ என்ற மந்திரச் சொல்லும் ஆறு எழுத்துக்களைக் கொண்டது.

முருகப்பெருமானுக்கு 'ஆறுமுகம்' என்றொரு பெயரும் உண்டு. ஆறு திருமுகங்களைக் கொண்டவர் என்பதால், இவருக்கு 'ஆறுமுகம்' என்ற பெயர் வந்தது. அது தவிர, முருகப்பெருமானோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக 'ஆறு' என்ற எண் திகழ்கிறது. இதுதவிர, வலது கண்கள் ஆறு, இடது கண்கள் ஆறு, வலது புஜம் ஆறு, இடது புஜம் ஆறு, முருகப்பெருமானுக்குரிய 'சரவணபவ' என்ற மந்திரச் சொல்லும் ஆறு எழுத்துக்களைக் கொண்டது.

மேலும் திதிகளில் ஆறாவது திதியான சஷ்டியே, முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பதற்கு உகந்த திதியாகும். அதே போல் கிழமைகளில், ஆறாவது கிழமையாக வரும் வெள்ளிக்கிழமையே, முருகப்பெருமானை வழிபடுவதற்கு சிறந்த நாளாகவும் விளங்குகிறது. கார்த்திகை பெண்கள் ஆறுபேர் சேர்ந்து, முருகப்பெருமானை வளர்த்தனர். அதைக்குறிக்கும் வகையில் ஆறு மீன்களின் கூட்டமாக உள்ள கார்த்திகை நட்சத்திரம் தான், முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய சிறந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் வரும் நாளை 'கிருத்திகை' என்றும் குறிப்பிடுவார்கள்.


Next Story