குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆலங்குடி குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
திருவாரூர்
நீடாமங்கலம்;
நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர். நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
Related Tags :
Next Story