வேங்கராயன்குடிக்காடு வில்லாயி அம்மன் கோவிலில் திருவாசக முற்றோதல்
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேங்கராயன்குடிக்காடு வில்லாயி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது
தஞ்சாவூர்;
தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்றுகாலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காசவளநாடு நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சை அப்பர் தமிழ் மன்றத்தினர் இணைந்து, வில்லாயி அம்மன் கோவில் சன்னதியில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை தொடங்கினர்.முதலில் விநாயகர் வணக்கத்துடன் ஏழு திருமுறைகளையும் பாடினர். காலை தொடங்கிய திருவாசக முற்றோதல் தொடர்ந்து இடைவிடாமல் 5 மணி நேரம் நடைபெற்றது. முற்றோதல் நிகழ்வில் அப்பர் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியை புவனசுந்தர லட்சுமி, பேராசிரியர் திருநாவுக்கரசர் மற்றும் காசவளநாடு நமச்சிவாய அருள்நெறி சபை நிர்வாகிகள் தர்மராஜ், கோவிந்தராஜ், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.;இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.