சீதளா தேவி மகா மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்


சீதளா தேவி மகா மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்
x

பூம்புகார் அருகே வானகிரி சீதளா தேவி மகா மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம் நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு;

பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் சீதளா தேவி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆண்டு உற்சவம் கடந்த வாரம் காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தீமிதி உற்சவமான நேற்று மாலை திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி மற்றும் அல கு காவடிகளுடன் காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக மேலதாளம் முழங்க வந்தனர். தொடர்ந்து கோவிலில் வாசலில் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். முன்னதாக வானகிரி அக்ரகாரத்தில் காத்தவராயன்- ஆரியமாலா திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story