ரூ.4 லட்சத்தில் சுந்தர குஜாம்பிகை அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு

ரூ.4 லட்சத்தில் சுந்தர குஜாம்பிகை அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு
x

ரூ.4 லட்சத்தில் சுந்தர குஜாம்பிகை அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு

திருவாரூர்

குடவாசல்

குடவாசல் அருகே திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் உள்ள சுந்தர குஜாம்பிகை அம்மனுக்கு நேற்று திருவீழிமிழலை மக நட்சத்திர அன்னதான கட்டளை சார்பில் ரூ. 4 லட்சம் செலவில் புதிய வெள்ளி கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் சிவாச்சாரியார்கள் பிச்சுமணி, மகாலிங்கம் ஆகியோரின் யாகசாலை பூஜையை நடத்தினர். தொடர்ந்து திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ராமகிருஷ்ணன், அன்னதான கட்டளை ஒருங்கிணைப்பாளர் சீதாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story