ராமானுஜர் அவதார உற்சவம் ; திருதேர் விழா


ராமானுஜர் அவதார உற்சவம் ; திருதேர் விழா
x

சித்திரை மாத விழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் மற்றும் ராமானுஜர் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட படுகிறது. இந்த கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாத விழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த மாதம் 23-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாள் விழாவில் சிம்ம வாகனம், கருட சேவை,ஷேச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கடந்த 29-ம் தேதி ஆதிகேசவபெருமாள் திருதேர் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை ராமானுஜர் 1007-வது அவதார உற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான திரு தேர் விழா நடைபெற்றது. ஸ்ரீராமானுஜர் திரு தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர்.


Next Story