திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 14-ம் தேதி புஷ்ப யாகம்


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 14-ம் தேதி புஷ்ப யாகம்
x

கூடை கூடையாக கொண்டுவரப்பட்ட பூக்களால் கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நானம் செய்யப்படுகிறது.

திருப்பதி:

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வரும் 14-ம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இதற்காக 13-ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

புஷ்ப யாகத்தன்று காலையில், 9.30 மணி முதல் பகல் 11 மணி வரை கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதன்பின்னர், மதியம் 1 மணி முதல் 4 மணி வரை புஷ்ப யாகம் நடைபெறும். கூடை கூடையாக கொண்டுவரப்பட்ட சாமந்தி, குன்னேறு, மொகலி, மல்லிகை, ஜாதிமல்லி, ரோஜா, அல்லி போன்ற பூக்களால் ஸ்நானம் செய்யப்படுகிறது.

பின்னர் மாலையில் கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்துடன் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.


Next Story