சித்தாடி காத்தாயி அம்மன் கோவிலில் நவ சண்டி யாகம்
சித்தாடி காத்தாயி அம்மன் கோவிலில் நவ சண்டி யாகம்
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் அருகே சித்தாடி காத்தாயி அம்மன் கோவி்ல் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவ சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந்தேி கொடியேத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி லட்சார்ச்சனை, அம்மனுக்கு சீர்வரிசை, பால்குடம், சாமி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 11 மணி அளவில் நவ சண்டி யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் சித்தாடி கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் நாளை காலை 10 மணிக்கு பச்சை போடுதல் நிகழ்ச்சியும், முடிகொண்டான் ஆற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
Related Tags :
Next Story