நாகக்கன்னி அம்மன்
ஒடிசா மாநிலம் பாலிபட்னா நகரில் உள்ள பழமையான அம்மன் ஆலயத்தில் அன்னையானவர், மேலே மனித உடலோடும், இடுப்புக்கு கீழே பாம்பு உடலோடும் காட்சி தருகிறாள்.
ஒடிசா மாநிலம் பாலிபட்னா நகரில் இருக்கிறது, காசியந்தோதி என்ற ஊர். இங்கு மிகவும் பழமையான அம்மன் கோவில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் எவ்வளவு நூற்றாண்டு பழமையானது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த ஆலயத்தில் அருளும் அம்பாளின் திருநாமம், உத்தராயணி அம்மன் என்பதாகும். இந்திய தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் உள்ள அன்னையானவர், மேலே மனித உடலோடும், இடுப்புக்கு கீழே பாம்பு உடலோடும் காட்சிதருகிறாள். கோனார்க் சூரியனார் கோவிலில் காணப்படும் நாகக்கன்னியின் உருவத்தை இந்த அம்மன் வடிவம் நினைவுபடுத்துகிறது.
Related Tags :
Next Story