பால்குட ஊர்வலம்


பால்குட ஊர்வலம்
x

பால்குட ஊர்வலம்

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் வில்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் பரிவார தெய்வங்களான சித்தி விநாயகர், பைரவர், மலையாளத்தம்மன், அங்காளம்மன் ஆகிய சன்னதிகளுக்கு திருப்பணி செய்யப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. குடமுழுக்கு 3-ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நேற்று காலை காசாம்பள்ளம் குளக்கரையில் இருந்து பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க, வாணவேடிக்கைளுடன் பால் குடம், செடல் காவடி, பால்காவடி, பறவைகாவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் வில்லாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story