மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
![மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2023/05/12/1283643-14877211.webp)
மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
திருவாரூர்
மன்னார்குடி கணக்கன் தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் 41-ம் ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று பால்குடம், காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மன்னார்குடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், பத்தர்கள் கலந்துகொண்டு பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். முன்னதாக பால்குடம் மற்றும் காவடிகள் மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளக்கரையில் இருந்து புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story