வெகு விமர்சையாக நடைபெற்ற மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம்


வெகு விமர்சையாக நடைபெற்ற மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம்
x

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம் மூன்றாண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட் டம் மதுராந்தகத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரி காத்த ராமர் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் ராமர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்தார். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய தேரில் ராமர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் எழுந்தருளினார். இதையடுத்து, பக்தர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 மாட வீதிகள் வழியாக சென்று தேரடி தெரு, சூனாம்பேடு சாலை, ஹாஸ்பிடல் சாலை, தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

இந்த தேரோட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,"கோவிந்தா கோவிந்தா" கோஷம் முழக்கமிட்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடை பெற்றதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக தேர் சென்ற பாதைகளில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம், மோர், சர்க்கரை பொங்கல் வழங்கினர். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story