கிருஷ்ணர் வீதி உலா


கிருஷ்ணர் வீதி உலா
x

ஆரணி பஜார் வீதியில் கிருஷ்ணர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில் ஸ்ரீராஜமன்னார் கிருஷ்ண பஜனை மந்திர தேவஸ்தான கோவில் உள்ளது. இந்த கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி காலை மூலவருக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை சிறப்பு பூஜை, சிறப்பு ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.

பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க, வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story