கன்னியாக இருக்கும் அம்மன்...!


கன்னியாக இருக்கும் அம்மன்...!
x

இந்தியாவின் தென்கோடியில் வங்காளவிரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இடத்தில் இருக்கிறது, பகவதி அம்மன் ஆலயம். கன்னியாகுமரியில் உள்ள இந்த அம்மன், கன்னியாகவே இருப்பதால், இத்தலம் 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்படுகிறது. கேரள தேசத்தை நிர்மானித்ததாக இந்து சமய புராணங்கள் சொல்லும் பரசுராமரால், இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம், அம்மனின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக போற்றப்படுகிறது. இந்த ஆலய அம்மனின் மூக்குத்தி ஒளிமிக்கதாகவும், யோகசக்தியின் வெளிப்பாடாகவும் இருப்பதால், பக்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த பாணாசூரன் என்பவன், பிரம்மனிடம் இருந்து 'எனக்கு மரணம் என்ற ஒன்று நிகழ்ந்தால், அது கன்னிப் பெண்ணின் கையால் நிகழ வேண்டும்' என்று வரம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சிவபெருமானை மணம் முடிக்க காத்திருந்த பார்வதிதேவியின் திருமணத்தை நாரதர் தடை செய்தார். திருமணம் தடைபட்டதால் கோபத்தில் இருந்த பார்வதியின் குறுக்கே வந்த பாணாசூரனை, அன்னை வதம் செய்த தலம் இதுவாகும்.


Next Story