பவுர்ணமி சிறப்பு பூஜை


பவுர்ணமி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் நடந்தது. பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு குருநாதர் சக்தியம்மா தைப்பூசம், பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

பின்னர் குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர், நறுமண பொருட்கள் உள்பட 27 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது.


Next Story