குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - ரிஷபம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களூக்கு காட்சி
தூத்துக்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். பத்து நாட்கள் முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
முத்தாரம்மன் அம்மன் இரண்டாம்நாள் தசரா திருவிழாவில் கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கூடும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று, தற்போது அம்பாளுக்கு பால் ,மஞ்சள், விபூதி ,தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சப்பர பவனி அபிசேகம் நடை பெற்று வருகின்றது. தொடர்ந்து அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்ற பின்னர், இரவு அம்பாள் முத்தாரம்மன் பார்வதி திருக்கோலத்தில் ரிஷபம் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்த்களுக்கு காட்சி அளித்து வருவார்.