மகாளய அமாவாசை.. அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம்:
இந்துக்களின் புனித ஸ்தலமாகவும் தீர்த்த முக்தி ஸ்தலமாக ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. இங்கு தினமும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.
நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். முக்கியமாக அமாவாசை நாளன்று அதிக அளவில் மக்கள் தர்ப்பணம் செய்வர். மேலும் மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்நிலையில் இன்று மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான மக்கள் காலை முதலே ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story