சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.