சித்திரை திருவிழா: யாழி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்த மீனாட்சி அம்மன்
நாளை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
அவ்வகையில், திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை சுந்தரேஸ்வரர் பிச்சாடனார் ரூபத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, இரவில் யாழி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்தி வாகனத்தில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடையுடன் எழுந்தருளியும் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. 22-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.