சித்தோடுமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சித்தோடு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பவானி
சித்தோடு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
பவானி சித்தோட்டில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து யாக சாலை தொடக்க விழா, முதல் கால யாக பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜையும், அஷ்ட பந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சியும், கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை 3-ம் கால யாக பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது.
அன்னதானம்
கன்னி மூல கணபதி, முகூர்த்த கணபதி, முனீஸ்வரர், பச்சையம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுடன் மாகாளியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனிதநீர் அங்கிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் தம்பணன் தலைமையில், கொத்துக்காரர் ஜெயச்சந்திரன், முன்னாள் சித்தோடு பேரூராட்சி தலைவர் வரதராஜன், பாலசுப்பிரமணியம், கோபு, தையல்நாயகம், வெங்கடேஷ், மாதேஷ், சிவா, ராமு, கதிர்வேல் உள்பட பலர் செய்திருந்தனர்.