சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா


சென்னிமலை   மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
x

சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் விழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 19-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை, மாலையில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் நாள்தோறும் காலை கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வருகின்றனர்.

வருகிற 2-ந் தேதி இரவு 8 மணிக்கு மாவிளக்கு திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டூர், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மேள, தாளங்கள் முழங்க மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வருவார்கள். மறுநாள் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை பொங்கல் விழா நடைபெறுகிறது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைப்பார்கள்.

அன்று இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் 4-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


Next Story