திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம்


திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம்
x

காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விழாவின் 7-ம் நாளான இன்று கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைப்பெற்றது. முதலில் விநாயகர் தேரை மாட வீதிகளில் பக்தர்கள் இழுத்து சென்றனர். 2வது வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் நடைபெறுகிறது.

2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள்.

பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story