திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்


திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
x

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவில் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூர்த்தி தனி சன்னதியில் அருள்பாளித்து வருகிறார். ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படும் இங்கு நடராஜர் தனி சபையில் அருள் பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது

இந்த கோவிலின் ஆண்டு இந்திர பெருவிழா கடந்த 21-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று முக்கிய திருவிழாவான தேரோட்டம் நடந்தது. இதை ஒட்டி விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் ஆகியோர் அதிகாலை தேரில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பிறகு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு வீதிகள் வழியாக மாலை கோவிலை அடைந்தது. அப்போது கூடி இருந்த திரளான பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், பூக்களைத் தூவியும் வரவேற்றனர்.


Next Story