கடனை விரட்ட 10 கருமிளகு
கை நீட்டி கடன் வாங்கும் நம் வீட்டில் தரித்திரம் நுழைந்துவிடும். செலவை குறைத்து சேமிப்பை வளர்த்து கடனை தவிர்ப்பதே சிறப்பான வாழ்வு. அனைவருக்கும் அவ்வாழ்வு சாத்தியம் இல்லை.
அவசர தேவைக்கு வேறு வழி இல்லாமல் பணம் தேவைப்படும் போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உதாரணத்திற்கு கல்யாண செலவு மருத்துவ செலவு இப்படிப்பட்ட செலவுகளுக்காக கடனை வாங்கி விட்டீர்கள். பின்னர் பண தேவை பூர்த்தி ஆகி கடன் பிரச்சினையில் இருந்து வெளிவந்து இருப்பீர்கள்.
அதற்குப் பின்பு நிறைய வருமானம் உங்களுக்கு வருகிறது. மற்ற எந்த கடன் தொந்தரவும் கிடையாது. ஆனால் என்றோ வாங்கிய ஏதோ ஒரு கடனை திருப்பி அடைக்க மட்டும் நேரம் வரவில்லை என்றால் அந்த கடனின் மூலம் உங்களுக்கு தரித்திரம் பிடித்து இருக்கிறது என்று அர்த்தம். இதைத்தான் 'தரித்திர கடன்' என்று சொல்லுவார்கள். இதற்கான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
கை நிறைய சம்பாதிக்கிறேன். ஆனால், என்றோ வாங்கிய இந்த கடனை மட்டும் என்னால் திருப்பி தர முடியவில்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் மிளகு.
ஒரு கைப்பிடி மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறைக்கு சென்று தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு மஞ்சள் நிற துணியில் மிளகை வைத்து, அதில் ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசை வைத்து 2 கொட்டைப்பாக்குகளை வைத்து, முடிச்சாக கட்டி கடன் அடைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இதை ஒரு மண் பானையில் பூஜை அறையில் வைத்தாலும் சரி, அல்லது பணம் வைக்கும் பெட்டியில் வைத்தாலும் சரி. ஆக மொத்தத்தில் மிளகு, சில்லறை காசு, கொட்டைப்பாக்கு இந்த 3 பொருட்களும் ஒன்றாக சேர்ந்து அப்படியே இருக்க வேண்டும்.
அந்தப் பானைக்குள் ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் நீங்கள் யாரிடம் கடனை வாங்கினீர்களோ அவர்களுடைய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எழுதிப் போடுங்கள். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக திருப்பிக் கொடுக்கவே முடியாத கடன் கூட ஏதாவது ஒரு ரூபத்தில் சீக்கிரமாக திருப்பி அடைக்க கூடிய சூழ்நிலையை இந்த பரிகாரம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
அடித்துப் பிடித்து கடனை திருப்பிக் கொடுத்து விட்டீர்கள். இந்த முடிச்சை என்ன செய்வது. உள்ளே இருக்கக்கூடிய நாணயங்களை மட்டும் எடுத்து ஏதாவது தர்ம காரியம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொட்டைப்பாக்கு மிளகை ஓடும் தண்ணீரில் விட்டு விடுங்கள். அப்படி இல்லை என்றால் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம். நம்பிக்கையோடு செய்தால் இந்த பரிகாரம் உங்களுடைய கடன் சுமையை நிச்சயம் குறைக்கும்.