பவானிசெல்லியாண்டி அம்மன் கோவில் தேரோட்டம்


பவானிசெல்லியாண்டி அம்மன் கோவில் தேரோட்டம்
x

பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

ஈரோடு

பவானி

பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

செல்லியாண்டி அம்மன்

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் வகையறா கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களின் மாசி பொங்கல் விழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 21-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினமும் கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். பின்னர் 22-ம் தேதி கொடியேற்றப்பட்டது. 27-ந் தேதி செல்லியாண்டி அம்மன் கோவிலில் உள்ள கருவறைக்குள் ஆண், பெண் பக்தர்கள் சென்று அம்மனுக்கு பால், இளநீர், திருமஞ்சனம் கலந்த புனித நீரை ஊற்றி வழிபட்டனர்.

நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சியான சேறு பூசும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து நேற்று பகல் 1.30 மணி அளவில் உற்சவமூர்த்திகளான செல்லியாண்டி அம்மன், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராஜன், நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகராட்சி உறுப்பினர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது பவானி பூக்கடை வீதி, வி.என்.சி.கார்னர் வழியாக செல்லியாண்டி அம்மன் கோவிலை சென்றடைந்தது.


Related Tags :
Next Story