திருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் இன்று செல்லவேண்டாம்.. வனத்துறை தடை


திருமலை நம்பி கோவில்
x

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ளது அழகிய நம்பிராயர் திருக்கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் நம்பியாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த தலம் திருமலை நம்பி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். இக்கோவிலில் சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம், பங்குனி பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறை இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நம்பியாற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story