நாளை ஆவணி பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்


திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
x

பவுர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அவ்வகையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.02 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story