ஆண்டாள் திருக்கல்யாணம்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு சாயரக்சை, 6.30 மணிக்கு ஸ்ரீமத் மூல பாராயணம், சகஸ்ரநாம பாராயணம், 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, சீர் எடுத்து வருதல், ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் மாலைமாற்று வைபவம், ஊஞ்சல், அதைத்தொடர்ந்து வாரணம் ஆயிரம் பாடி ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் திருக்கல்யாணம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது.
பக்தர்கள் சீர் வரிசையாக புதிய புடவை, வேட்டி கொண்டு வந்து சாமிக்கு சாற்றி மீண்டும் தனது புத்தாடையை கொண்டு சென்றனர். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story