ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு


ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு
x

ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சென்னை,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் அதிக அளவில் இந்த பூஜைகளில் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள பல அம்மன் கோவில்களில் ஆடி மாதமே திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில், ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் பூஜைகளும் நடைபெற்றது. ஆடி வெள்ளியை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதேபோல, புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story