கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு


கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு
x

அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது . இந்த ஆண்டுக்கான தை அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3-30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து உச்சிக்கால தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு 4-30மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். இரவு 9 மணிக்கு வெள்ளிகலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக கோவிலுக்குள் அம்மன் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடந்தது.


Next Story