மகா சதாசிவ மூர்த்தி


மகா சதாசிவ மூர்த்தி
x
தினத்தந்தி 14 Dec 2021 10:56 AM IST (Updated: 14 Dec 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

சிவ நெறியின் பரம்பொருளாக போற்றப்படும் சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமானது, சதாசிவ வடிவம்.

சிவனுடைய 64 மூர்த்தங்களில் இதுவும் ஒன்று. வெண் நிறத்துடன் ஐந்து முகங்கள், பத்து கரங்கள், பதினைந்து கண்கள் கொண்டு காட்சி தருபவர் என்று இவரைப் பற்றி புராணங்கள் சொல்கின்றன.

நீங்கள் இங்கே படத்தில் பார்ப்பதும் சதாசிவ மூர்த்தியின் வடிவம்தான். இவரை ‘மகாசதாசிவ மூர்த்தி’ என்பார்கள். இவருக்கு 25 தலைகள், 50 கரங்கள், 75 கண்கள் இருக்கும். இதுவும் 64 திருவடிவங்களில் ஒன்றுதான். இவர் கயிலையில் வீற்றிருப்பவராக அறியப்படுகிறார். இவரைச் சுற்றி 25 மூர்த்திகளும் காணப்படுவர். இவரை கயிலையில் இருந்தபடி ருத்திரர்ளும், சித்தர்களும், முனிவர்களும் வணங்குவர்.

இந்த மகாசதாசிவ மூர்த்தியின் வடிவம், சிவபெருமானின் மற்ற வடிவங்களைப் போல, கோவில்களில் சிலை வடிவாக இருப்பதில்லை. பெரும்பாலும் இவை கோவில் கோபுரங்களில் சுதை வடிவில்தான் காணப்படும். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், காஞ்சிபுரம் கரகரேஸ்வர் கோவில்களில் இந்த சிற்பத்தை சுதை வடிவில் தரிசிக்க முடியும்.

Next Story