கைரேகை அற்புதங்கள் மனைவியால் வாழ்க்கையில் உயர்வு


கைரேகை அற்புதங்கள் மனைவியால் வாழ்க்கையில் உயர்வு
x
தினத்தந்தி 21 Dec 2016 12:23 PM IST (Updated: 21 Dec 2016 12:23 PM IST)
t-max-icont-min-icon

ஒருவரது வாழ்க்கையில் திருமணத்துக்குப் பின், அனேக யோகங்கள், வீடு, வாசல், நல்ல பதவி போன்ற சுப பலன்கள் உண்டாவதைக் காணலாம். சாதாரண நிலையில் இருந்தவருக்கு எப்படி இந்த திடீர் மாற்றம் என்று ஆராய்ந்து பார்த்தால், அவரது மனைவியின் வருகை அந்த மாற்றத்தைக் கொடுத்திருப்பதை உணரலாம். பொதுவாக ஒரு ஆணின் ஜாதகப்படி, ரிஷப லக்னமும், 12-ம் வீடான மேஷ ராசி

ருவரது வாழ்க்கையில் திருமணத்துக்குப் பின், அனேக யோகங்கள், வீடு, வாசல், நல்ல பதவி போன்ற சுப பலன்கள் உண்டாவதைக் காணலாம். சாதாரண நிலையில் இருந்தவருக்கு எப்படி இந்த திடீர் மாற்றம் என்று ஆராய்ந்து பார்த்தால், அவரது மனைவியின் வருகை அந்த மாற்றத்தைக் கொடுத்திருப்பதை உணரலாம். பொதுவாக ஒரு ஆணின் ஜாதகப்படி, ரிஷப லக்னமும், 12-ம் வீடான மேஷ ராசியில் புதன் வர்கோத்தம நிலையும் அடைந்தவருக்கு, தன் மனைவியின் மூளை செயல்பாடு, விவேகம், சாமர்த்தியம் போன்ற பண்புகளால் குறுகிய காலத்தில் சமூகத்தில் பெரும் புள்ளியாக மாறும் யோகம் அமையப்பெறும். மேலும் 12-ம் வீட்டில் புதன் அமைந்த ஜாதகருக்கு, மகாவிஷ்ணுவின் அருள் உண்டு.

இனி கைரேகை சாஸ்திரப்படி தன் மனைவியால் வாழ்க்கையில் உயர்நிலை அடையும் பாக்கியசாலிகள் யார்? என்பதைப் பார்க்கலாம். விதிரேகை சாதாரணமாக மனிதனின் கையில் சுக்ர மேட்டுக்கும், சந்திர மேட்டுக்கும் இடையே உற்பத்தியாகி, சனி மேட்டை நோக்கி சென்று முடிவடையும். ஆனால் சிலருக்கு விதி ரேகை, சந்திர மேட்டில் இருந்து அபூர்வமாக உற்பத்தியாகி அந்த ரேகை சனி மேட்டை அடைந்து முடிவு பெற்றிருந்தால், அந்த நபர், தன் மனைவியால் வாழ்க்கையில் அதிவேகமாக முன்னேறுவார் என்பதைக் காட்டும் அறிகுறியாகும். அது போல சுக்ர மேடு ஒரு முக்கியமான மேடாகும். அபூர்வமாக சுக்ர மேட்டில் இருந்து விதிரேகை உற்பத்தியாகி, அந்த ரேகை சனி மேட்டில் எந்த பின்னலும் இல்லாமல் சுத்தமாக அமைந்திருந்தால், அந்த நபர் தன் மனைவியால் வாழ்க்கையில் பலவிதத்திலும் முன்னேறுவார். அவர் அடையும் முன்னேற்றம் அனைத்தும் மனைவியால் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

Next Story