சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை


சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை
x

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் விரைவில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சேலம்:

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இந்த கோவிலில் விரைவில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கோவிலில் உள்ள 7 நிரந்தர உண்டியல்கள் இன்று திறந்து பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

முடிவில், ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்து 650 ரொக்கம், 36 கிராம் தங்கம், 370 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story