1,008 திருவிளக்கு பூஜை


1,008 திருவிளக்கு பூஜை
x

நெல்லையில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

சிறப்பு பூஜை

நெல்லை டவுன் அய்யப்பா தேவா சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி நெல்லை டவுன் சுவாமி சன்னதியில் அய்யப்ப பூஜை மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், காலை 8 மணிக்கு காந்திமதி அம்பாள்-நெல்லையப்பர் தர்ம சாஸ்தா வழிபாடும் நடந்தது.

மாலை 6 மணிக்கு நெல்லையப்பர் கோவில் முன்பு உள்ள சுவாமி சன்னதி தெருவில் அனுப்புகை மண்டபத்தின் முன்பு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தனர். சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திருவிளக்கு பூஜை

இதைத்தொடர்ந்து 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிளக்கு பூஜை நடந்த போது சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.

கோ பூஜை

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பூதநாதர் ஆராதனையும், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், கோ பூஜை, கஜபூஜை மற்றும் சிறப்பு பூஜைகளும் தர்மசாஸ்தா ஆராதனையும் நடக்கிறது.

பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு 41 தீபஜோதி அலங்கார காட்சியும், இரவு 7 மணிக்கு தர்ம சாஸ்தா சப்பர வீதி உலாவும் நடக்கிறது.

இதேபோல் நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்திலும் திருவிளக்கு பூஜை நடந்தது.


Next Story