இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது.
சுவிட்ஸ்ர்லாந்து,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு மே.30-ல் கடிதம் எழுதி இருந்தது.
45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு ஜூன் 2023 இல் தேர்தல் நடத்தவிருந்தது. இருப்பினும், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டம் காரணமாக தேர்தல் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.