குரங்கம்மை இனி எம். பாக்ஸ் என அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு


குரங்கம்மை இனி எம். பாக்ஸ் என அழைக்க  உலக சுகாதார அமைப்பு முடிவு
x
தினத்தந்தி 29 Nov 2022 6:49 PM IST (Updated: 29 Nov 2022 6:54 PM IST)
t-max-icont-min-icon

ஆப்ரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால் குரங்கம்மை இனி எம். பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஜெனிவா:

டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story