'மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்...' - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேச்சு


மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்... - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேச்சு
x
தினத்தந்தி 23 Aug 2023 5:25 PM IST (Updated: 23 Aug 2023 10:11 PM IST)
t-max-icont-min-icon

மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புவதாக புதின் தெரிவித்தார்.

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 'பிரிக்ஸ்' அமைப்பின் 15-வது உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வரவே ரஷியா விரும்புகிறது என்று தெரிவித்தார். மேலும் மேற்கு நாடுகளின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக உக்ரைனில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story