ஜி20 மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு; 3 மணி நேரம் முக்கிய பேச்சுவார்த்தை!


ஜி20 மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு; 3 மணி நேரம் முக்கிய பேச்சுவார்த்தை!
x

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்.

பாலி,

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முக்கிய சந்திப்பை நடத்தினர்.

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையில் நீண்ட நெடுங்காலமாக பதற்றம் நிலவி வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க-சீன உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பைடனுடன் வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்துப் பரிமாற்றத்திற்குத் தயாராக இருப்பதாக ஜி ஜின்பிங் கூறினார்.

3 மணி நேரம் நடந்த சந்திப்பில் ஜி ஜின்பிங்கிடம், தைவான் மீது சீனாவின் கட்டாய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் மனித உரிமைகள் குறித்த கவலைகளை ஜோ பைடன் எழுப்பினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை இரு தலைவர்களும் கண்டித்துள்ளனர். அணு ஆயுதப் போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.



Next Story