அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு
அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்,
உலகில் சக்தி வாய்ந்த ராணுவ படைகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க தரைப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் கூறியுள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்து அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம், அதாவது சுமார் 25 ஆயிரம் தரைப்படை ராணுவ வீரர்களை குறைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் வருங்காலத்தில் எதிரி நாடுகளை சமாளிக்கும் வகையில் நவீன ஆயுதங்கள் உற்பத்திக்கான செலவை அதிகரிக்க உள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story