ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமெரிக்கா பாராட்டு


ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமெரிக்கா பாராட்டு
x

ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

வாஷிங்டன்,

கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்ட அவர், போருக்கான நேரம் இதுவல்ல என்று வலியுறுத்தினார்.

மேலும் இது குறித்து ஏற்கனவே பலமுறை தொலைபேசி வாயிலாக பேசியதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த ரஷிய அதிபர் புதின், போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.


Next Story