காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்


காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
x

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது.

நியூயார்க்,

காசா பகுதியில் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டி ஐ.நா., பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையே கடந்தாண்டு அக்டோபரிலிருந்து போர் நடந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அங்கு உனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா., பொது சபையில் ஜோர்டான் வரைவு தீர்மானம் தாக்கல் செய்தது.

இந்நிலையில் வரும் ரமலான் பண்டிகையை கருத்தில் கொண்டு 'காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 14 உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவோ, எதிர்த்தோ வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 4 முறை கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையில் இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story