சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் - ஐ.நா. அறிக்கை
சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய இந்த உள்நாட்டு போரானது இன்னும் முடிந்தபாடில்லை.
இந்த போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பலியாகி உள்ளனர். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமானோர் பாதுகாப்பு கருதி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்கின்றனர். அந்தவகையில் சூடானில் இருந்து 78 ஆயிரத்து 598 பேர் எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். இது எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 46 சதவீதம் ஆகும். இந்த தகவலை ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story