ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; எண்ணெய் ஆலை தீப்பிடித்து 3 பேர் பலி
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
மாஸ்கோ,
2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷியா போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. அந்தவகையில் ரஷியாவின் ரோவென்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் அங்குள்ள ஒரு எண்ணெய் ஆலை தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கள் போன்றவை சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
மற்றொருபுறம் அந்த எண்ணெய் ஆலையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. எனினும் அங்கு வேலை பார்த்த 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
Related Tags :
Next Story