துருக்கி நிலநடுக்கம் ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை பேரழிவு: உலக சுகாதார அமைப்பு


துருக்கி நிலநடுக்கம் ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை பேரழிவு: உலக சுகாதார அமைப்பு
x

துருக்கி நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத "மோசமான இயற்கை பேரழிவாக" அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கோபன்ஹேகன், டென்மார்க்.

கடந்த வாரம் துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத "மோசமான இயற்கை பேரழிவாக" அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், துருக்கியிலும் அண்டை நாடான சிரியாவிலும் தற்போது வரை 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகை உலுக்கிய இந்த நிலநடுக்கம் குறித்து ஐரோப்பியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூஜ் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறும்போது, "ஒரு நூற்றாண்டு காலமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் மிக மோசமான இயற்கை பேரழிவை நாங்கள் சந்தித்துள்ளோம்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர மருத்துவ குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 அவசர மருத்துவ குழுக்கள் இதுவரை துருக்கிக்கு வந்துள்ளன. நிலநடுக்கத்தின் அளவை நாங்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story